
தமிழர் பண்பாட்டுச் சங்கம் (சீல்நதிப்பள்ளத்தாக்கு)
Tamilische Kultur Verein
(Sihltal)
விழுதாகி விருட்சம் தாக்குவோம்
வேர் இழந்து அழிந்திடோம்
எமது இணையத்தளம் முகவரி
www.sihltaltamil.ch
மின்னஞ்சல் முகவரி
tks@sihltaltamil.ch
அனைவருக்கும் வணக்கம்
எனது நீண்டகால சிந்தனை சீல் நதியை அண்மித்து(Langnau/ Adliswil/Laimbach/Rüschlikon/Kilchberg/Thalwil) வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முகமாக ஒரு பொது நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இச் சங்கத்தின் ஓர் அறிமுக பொதுச்சந்திப்பினை 17.3.2019 அன்று ஒழுங்கு செய்துள்ளேன் இந்த சந்திப்பு எந்த ஒரு தனி நோக்கமும் இன்றி இங்கு வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முகமாக முன்னெடுத்துச் செல்வதே எனது எண்ணம் புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் அருகில் இருந்தும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு குறைந்தது வருகிறது ஆகவே இப்படியான நிகழ்வுகள் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் இனிவரும் காலங்களில் எங்கள் வாழ்க்கை உளவியல் தாக்கம் அதிகமாக வாய்ப்புண்டு ஓய்வூதிய காலத்தில் இப்படியான நிகழ்வுகள் மூலம் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதற்கு வாய்ப்புகளை உருவாக்க முடியும் இப்போதே இதற்கான அடித்தளத்தை உருவாக்கி அதனூடாக பயணிக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து இதில் எந்த ஒரு தனிமனித விருப்பு வெறுப்புமின்றி எல்லோரும் இணைந்து பயணிக்கலாம் என்பது எனது நம்பிக்கை அதற்காக 17.3.2019 அன்று காலை 10:00 மணி முதல் இரவு வரை
Katholische Kirche
Berghalde weg 1
8135 Langnau am Albis
என்னும் இடத்தில் உள்ள மண்டபத்தில் ஒழுங்கு செய்துள்ளேன்
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில்
சிற்றுண்டி வகைகள் எடுத்து வரலாம் மதிய மற்றும் இரவு உணவுகள் மற்றும் தமிழர் பண்பாட்டு உணவு போன்றவற்றை (உ+ம் கூழ்) எல்லோரும் இணைந்து சமையல் செய்து உண்டு அன்றைய நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எத்தனை பேர் என்று தெரிந்துகொண்டால் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு இலகுவாக இருக்கும்
இதுபோன்ற நிகழ்வு பல வருடங்களுக்கு முன் இரு முறை ஒழுங்கு செய்திருந்தேன் அந்த நிகழ்வுகள் பலருடைய வரவேற்பைப் பெற்றிருந்தது பல வேலைப் பளு காரணமாக நீண்டகால இடைவெளியின் பின்னர் மீண்டும் ஒர் முயற்சி
உங்கள் நண்பர்கள் இக்குழுவில் இல்லை எனில் அவர்களுக்கும் தெரியப்படுத்தவும் மற்றும் அவர்களுடைய தொலைபேசி இலக்கத்தையும் எனக்கு அறியத் தரவும் ஏனெனில் Whatsapp/Viber மூலம் எல்லோரையும் இணைத்துக் கொள்வதற்கு
உங்கள் கருத்துக்களை என்னுடன் நேரடியாக பகிர்ந்துகொள்ளுங்கள்(தனிமரம்தோப்பாகாது) ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகள் இவ்வண்ணம் செ.சிவபாலன்
079 259 99 44
Leave a Reply